pipxஉடன் தனித்தனியாக பைதான் பயன்பாடுகளை இயக்குவதன் மூலம் பதிப்பு மோதல்களைத் தவிர்க்கவும் , பாதுகாப்பை மேம்படுத்தவும் செய்யலாம்
நாம் வழக்கமான நம்முடைய அன்றாட பணிகளுக்காக பைதானைப் பயன்படுத்தி கொண்டிருந்தால்ஏராளமா அளவில் பைதான் பயன்பாடுகளை உருவாக்கி நிறுவுகை செய்து பயன்படுத்தலாம்.அவைகளுள் ஒரு சில நாம் முயற்சி செய்ய விரும்பும் கருவிகளாகும். மற்றவை , நாம் தினமும் பயன்படுத்தும் உண்மையான பயன்பாடுகள் ஆகும், எனவே நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு கணினியிலும் அவற்றை பைதான் பயன்பாடுகள் என அறியாமலேயே நாம் அவைகளை நிறுவுகை செய்து பயன்படுத்தி வருகின்றோம்.
இவ்வாபறான நிலையில் எந்த சூழ்நிலையில், பைதான் பயன்பாடுகளை மெய்நிகர் சூழல்களில் இயக்குவது , அவை மற்றவற்றுடன் ஒன்றுக்கொன்று சார்ந்திராமல் தனித்தனியாக வைத்திருப்பது எனும் செயலானது அவைகளுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்கும், பாதுகாப்பை மேம்படுத்து வதற்காக நம்முடைய கணினியின் மற்ற பகுதிகளிலிருந்து அவற்றைத் தவிர்ப்பதற்கும் மிகபயனுள்ளதாக இருக்கின்றது.இதுவே pipx ஆனது நமக்கு உதவ வருகின்ற இடம் (சூழல்)ஆகும் . பெரும்பாலான பைதான் பயன்பாடுகளை pipஐப் பயன்படுத்தி நிறுவுகைசெய்திட முடியும், இது பைதான் தொகுப்பை நிறுவுகைசெய்கின்றது. இருப்பினும், Pipx நம்முடைய பைதான் பயன்பாடுகளுக்கு ஒரு மெய்நிகர் சூழலை உருவாக்கி நிர்வகிக்கவும் அவற்றை எளிதாக இயக்கவும் உதவுகிறது.
pipxஐ நிறுவுகைசெய்தல்
Pipx ஆனது ஒருமுதன்மையாக RPM தொகுப்பாகும், மேலும் நாம் இதை Fedora, RHEL , CentOS ஆகிய இயக்கமுறைமைகளிலும் நிறுவுகைசெய்திடலாம் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ sudo dnf install pipx
pipxஐ பயன்படுத்துதல்
Cowsay தொகுப்பு, செறிவு ஆகிய கருவி மூலம் Pipxஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இபபோது காணலாம்.
தொகுப்புகளை நிறுவுகைசெய்தல்
நம்முடைய கணினியில் Pipx நிறுவப்பட்ட பிறகு, நாம் பைதான் தொகுப்புகளை இதனுடன் நிறுவுகைசெய்திடலாம் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$ pipx install <python_package>
Cowsay தொகுப்பை நிறுவுகைசெய்வதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
$ pipx install cowsay
installed package cowsay 4.0, Python 3.9.5
இந்த பயன்பாடுகள் இப்போது எளிதாக கிடைக்கின்றன
- cowsay
இப்போது நம்முடைய முனைமத்தின் மூலம் நம்முடன் பேசுவதற்கு நம்முடைய கணினியில் எங்கும்இந்த - cowsay வை இயக்கலாம்!
$ cowsay "I OSDC"
_________
| I OSDC |
=========
\
\
^__^
(oo)\_______
(__)\ )\/\
||----w |
|| ||
சிறப்பு அனுமதிகளுடன் நிறுவுகைசெய்தல்
அனைத்து பயன்பாடுகளும் Cowsay போன்று எளிமையானவை அல்ல. உதாரணமாக, செறிவு பயன்பாடு கணினியில் உள்ள பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்கிறது, எனவே இதற்கு சிறப்பு அனுமதிகள் தேவை. உடன் அந்த சிறப்பு அனுமதிகளை கணினியில் நிறுவுகைசெய்திடுக அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு
$ pipx install concentration
installed package concentration 1.1.5, Python 3.9.5
- concentration
"distractors" எனும் கோப்பில் பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட வலைத்தளங்களைத் தடுப்பதன் மூலம் கவனம் செலுத்த உதவும் வகையில் செறிவு வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைச் செய்ய, அது sudo அல்லது root சலுகைகளுடன் இயங்க வேண்டும். குறிப்பிட்ட பயனாளர் சலுகைகளுடன் எந்த கட்டளையையும் இயக்குகின்ற Doas கட்டளையின் பதிப்பான OpenDoas மூலம் இதைச் செய்யலாம். sudo சலுகைகளுடன் செறிவு இயக்க Doasஐ பயன்படுத்த பின்வரும் கட்டளைவரிகளை உள்ளிடுக:
$ doas concentrationimprove
doas (sumantrom) password:
செறிவு இப்போது D!எனும் கோப்பகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது: இதனை நாம் பார்க்க முடியும்
நிறுவப்பட்ட பயன்பாடுகளை பட்டியலிடுதல்
pipx listஎனும் கட்டளையானது pipx உடன் நிறுவப்பட்ட அனைத்து பயன்பாடுகளையும் அவற்றின் இயங்கக்கூடிய பாதைகளையும் திரையில் காண்பிக்கின்றது:
$ pipx list
venvs are in /home/sumantrom/.local/pipx/venvs
apps are exposed on your $PATH at /home/sumantrom/.local/bin
package concentration 1.1.5, Python 3.9.5
- concentration
package cowsay 4.0, Python 3.9.5
- cowsay
பயன்பாடுகளின் நிறுவுகையை நீக்கம் செய்தல்
நாம் இந்த செயல்கள் முடித்தவுடன் அவற்றின் நிறுவுகையை எவ்வாறு நீக்கம்செய்வது என்பதை அறிந்துகொள்வது மிகமுக்கியமானசெயலாகும். Pipx மிக எளிய நிறுவுகையின் நீக்கம் செய்கின்ற கட்டளையைக் கொண்டுள்ளது அதற்கான கட்டளைவரிகள் பின்வருமாறு:
$ pipx uninstall <package name>
Or you can remove every package:
$ pipx uninstall-all
pipx uninstall-all
uninstalled cowsay
uninstalled concentration
Pipxஐ முயற்சித்திடுக
Pipx என்பது பிரபலமான பைதான் பயன்பாடுகளுக்கான தொகுப்பு மேலாளர்ஆகும். இது PyPi யில் உள்ள எல்லாவற்றுக்கும் அணுகுதலை கொண்டுள்ளது, ஆனால் அது ஒரு செல்லுபடியாகும் தன்மையுடைய ஒருபைதான் தொகுப்பு ஆகும், ஒரு பைதான் வளையத்தின் அல்லது ஒரு பிணைய இருப்பிடத்தைக் கொண்ட ஒரு வளாக கோப்பகத்திலிருந்து பயன்பாடுகளை நிறுவுகைசெய்திட முடியும். நாம்ஏற்கனவே நிறைய பைதான் செயலிகளை நிறுவியிருந்தால், இந்த Pipxஐயும் முயற்சித்திடுக.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.