PWCT என்பது புதியநிரலாளர்களுக்காகவும், அனுபவமிக்க நிரலாளர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பொது நோக்கத்திற்கான காட்சி வாயிலான நிரலாக்க மொழியாகும்

PWCT என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற குறிமுறைவரிகளை எழுதுகின்ற தொழில்நுட்பம் தெரியாதவர்களும் நிரலாக்கங்களை (Programming Without Coding Technology) உருவாக்கஉதவுகின்ற இது 1 ,2 ,3 என்றவாறான படிமுறைகளில் நம்முடைய பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஒரு வழிகாட்டி அன்று. .
புதிய
நிரலாளர் ஒருவர் தரவு கட்டமைப்புகள்
, கட்டுப்பாட்டு கட்டமைப்புகள், நிரலாக்க முன்னுதாரணங்கள் போன்ற நிரலாக்க கருத்துக்களை எளிதாகஅறிந்து கொள்வதற்காக PWCT ஐப் பயன்படுத்திகொள்ளலாம். எந்தவொரு பெரிய , சிக்கலான மென்பொருளை உருவாக்க ஒரு அனுபவமிக்க நிரலாளரும் இந்தPWCT ஐப் பயன்படுத்தலாம்.
PWCT
இன் காட்சி கூறுகளைப் பயன்படுத்தி நிரலாக்க செயல்முறையில் ஒரேயொரு வரிகூட குறிமுறைவரிகளை எழுதாமல் ஒரு உரை நிரலாக்க மொழியையும் மொழிமாற்றியையும் மெய்நிகர் இயந்திரத்தையும் நாமே உருவாக்கிடமுடியும். அதனால் இது Supernova என்று அழைக்கப்படுகிறது, ஆயினும் இது ஒருகட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும்.
தற்போதைய காலகட்டத்தில் ல்வேறு தரவுத்தளங்கள், பல்லூடகங்கள், வலைபின்னல்கள், செயற்கைநினைவகங்கள்(AI), Simulation & கணித பயன்பாடுகள் ஆகிய அனைத்தும் இந்த PWCT ஐப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறாக உருவாக்கப்படடவைகளின் மூலக் குறிமுறைவரிகளை இதில் நாம் பார்க்கலாம்/ திருத்தம் செய்யலாம். PWCT ஆனது Harbour, Supernova, C, Python, C#,.NET ஆகியவற்றை ஆதரிக்கிறது மேலும் எந்தவொரு உரை அடிப்படையிலான நிரலாக்க மொழியிலும் குறிமுறைவரிகளின் உருவாக்கத்தை ஆதரிப்பதறகாக PWCTநீட்டித்துகொள்ளலாம்.
PWCT
பல மாதிரிகள், பயிற்சிகள், திரைப்படங்களுடன் வருகிறது.
இதன் வாயிலாக நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், பயன்பாடுகள்/அமைப்புகளை உருவாக்க அல்லது நடைமுறையில் காட்சி நிரலாக்கத்தைப் பற்றி சில புதிய ஆலோசனைகளைப் பெற விரும்பினால், இதுவே சரியானபயன்பாடாகும். ஒவ்வொரு கணினி பயனர்களுக்கும், அவர்கள் ஆரம்பநிலையாளர்களாக இருந்தாலும் சரிஅல்லது தொழில் வல்லுநர்களாக இருந்தாலும்சரி அவர்களுக்கு எளிதாக நிரலாக்க வசதியை வழங்குவதஇந்த செயல்திட்டத்தின் குறிக்கோளாகும். துவக்கநிலையாளர்கள் எனில் நிரலாக்கத்தின் கருவிகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் - எளிதாக இருக்க வேண்டும். எனவே இதனுடைய நிரலாக்கத்திலிருந்து குறிமுறைவரிகளை அகற்றப்பட்டுள்ளது. அனுபவமிக்க தொழில்முறை மேம்படுத்துநர்களுக்கு நிரலாக்கத்தை வழங்குவதற்கு ம் வரம்பற்ற , நீட்டிக்கக்கூடிய ஒரு கருவியாக இதுதிகழ்கின்றது.
,
மேலும்
இதில் உதவி ஆவணங்கள் ஆதரவுகள் கட்டணமில்லாமல் கிடைக் கின்றன
. எளிய நிரல் மூலம்MS-Windows இல் PWCT நிறுவுகைசெய்திடுவது எளிதான செயலாகும், நாம் பயன்படுத்தி கொள்வதற்காகவென இந்த மென்பொருளைப் பதிவிறக்கிய பிறகு நாம் பல மாதிரிகள், பயிற்சிகள் கானொளி காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து பார்வை யிடலாம்.சில PWCTஇன்பயனாளர்கள் விளக்கக்காட்சிகளை , கல்வி மென்பொருட்களை உருவாக்க இதனைப் பயன்படுத்தி கொள்கின்றனர். பல பயனாளர்கள் தங்களுடைய வணிக பயன்பாடுகளுக்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த தொழில் நுட்பம் மிக்கது ,சக்தி வாய்ந்தது , வரம்பற்றது என்பதற்கான சான்றாக புதிய நிரலாக்க மொழியை உருவாக்க இந்த மென்பொருளைப் பயன்படுத்திடலாம். இது Sourceforge இல் புரவலராக செய்யப்பட்ட ஒரு கட்டணமற்ற கட்டற்றசெயல் திட்டமாகும். எனவே இந்த மென்பொருளை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்திகொள்ளலாம். சி நிரலாக்க மொழியின் அடிப்படையில் PWCT ஐப் பயன்படுத்தி Ring நிரலாக்க மொழி உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பிரச்சனையுடைய செயற்களங்களை "Visual Programming Languages". என்று அழைக்கப்படுகின்றன. இந்த செயற்களத்தில் பல செயல்திட்டங்கள் உள்ளன, ஆனால் இந்த மொழிகளில் பெரும்பாலானவை கல்வி கற்பிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற செயற்களம் சார்ந்த மொழிகளாகும், ஆனால் பொது நோக்கத்திற்கான காட்சி நிரலாக்க மொழிகளைப் பொறுத்தவரை, அவற்றில் சில உள்ளன. நாம் புதியதாக ஏதேனும் உருவாக்க வேண்டுமென விரும்பினால் தேவையானதை இழுத்து கொண்டுவந்த விடுல்(Drag & Drop )எனும் வழி முறையை இந்த PWCT இல் பயன்படுத்துவதில்லை. PWCT ஆனது தானியங்கி படிமுறைகளின் மரபுஉருவாக்கம் , புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளருக்கு எளிய தரவுகளின் நுழைவு படிவங்களை வழங்குகின்ற கூறுகளுடன் தொடர்புகொள்வதற்காக பதிலளிக்கின்ற வகையில் ஒரு புதிய வழிமுறையை வழங்குகிறது. இந்த புதிய வழிமுறையின் பின்னணியில் உள்ள ஆலோசனை என்னவென்றால், வரைபட அணுகுமுறையைப் பயன்படுத்திடுகின்ற நிரலாக்கத் திற்கும், படிவ அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்திடுகின்ற நிரலாக்கத்திற்கும் இடையில் ஒருங்கிணைத்த ஒரு தானியங்கி காட்சி பிரதிநிதித்துவ செயல்முறை மூலம் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது. ஒரு அடிப்படை ஆலோனையுடன் நடப்புஉண்மை பணிகளுக்கான நடைமுறை பொது நோக்கத்திற்கான காட்சி நிரலாக்க மொழியைப் பெற பல ஆலோசனைகள் இதில்உருவாக்கப்பட்டுள்ளன.
முக்கியவசதிவாய்ப்புகள்
வணிக
த்திபயன்பாடுகளின் குறிமுறைவரிகளையாரும் காணமுடியாத மூடிய மூல பயன்பாடுகளை உருவாக்ககூட இதனை
( PWCT) பயன்படுத்திகொள்ளலாம்
காட்சி நிரலாக்கம் - ஒன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்கள், GUI ஐப் பயன்படுத்தி நிரலாக்கம்., இதில்தொடரியல் (இலக்கண) பிழைகள் எதுவும்இல்லை. நேர அளவு. வண்ணங்கள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
நடைமுறை பதிப்பாளர் - தன்னியக்கம் (IntelliSense), விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகள் (அதிக எழுதும் திறன்),தனிப்பயனாக்கம் (அதிகபட்சம். படிக்கக்கூடிய & எழுதக்கூடியது), வெட்டுதல்/நகலெடுத்தல்/ஒட்டுதல் & தேடுதல்/மாற்றுதல், VPL மொழிமாற்றுதல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
நிரலாக்க முன்னுதாரணம் - நிரலாக்க முன்னுதாரணத்தை கட்டாயப்படுத்த தேவையில்லை., செயல்முறை நிரலாக்கம்,பொருள் சார்ந்த நிரலாக்கம், நிகழ்வு உந்துதலின் நிரலாக்கம், முதன்மை சேவையாளர் நிரலாக்கம் (புதியது) ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
இணக்கமானது (விரும்பினால்) - உருவாக்கப்பட்ட மூலக் குறிமுறை வரிகளைப் பார்க்கவும்/திருத்தவும் முடியும், எந்த உரை நிரலாக்க மொழியையும் ஆதரிக்ககூடியது, C, Python, C# , Harbour & Supernova ஆகியவற்றிற்கான ஆதரவு, பெரிய அளவிலான பயன்பாடுகள்/அமைப்புகளை உருவாக்கிடுதல். ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
கட்டமைப்பு & நீட்டிப்பு - காட்சிவழிநிரலாக்க மொழிகளை உருவாக்கவும்/ பயன்படுத்தவும் செய்தல்,ஒன்றுக்கும் மேற்பட்ட VPL உடன் வருகிறது, புதிய கூறுகளை உருவாக்கிடுகின்றது, பாகங்களை மாற்றிய பின் நிரல்கள் புதுப்பிக்கப்படுகின்றது ஆகிய வசதிகளை கொண்டுள்ளது
இயக்கமுறைமை - மைக்ரோசாப்ட் விண்டோ அதன் பயன்பாடுகள் ஆதரிக்கின்து Wineஐப் பயன்படுத்தி லினக்ஸில் நன்றாக செயல்படுகிறது விண்டோ பயன்பாடுகளை உருவாக்கஉதவுகின்றது, பலதளங்களின் செயல்படுகின்ற பயன்பாடுகளை உருவாக்கஉதவுகின்றது ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டது
இதில் Drag & Drop இழுத்துசென்று விடுவதற்குப் பதிலாக இயக்கநேர குறிமுறைவரிகளை உருவாக்கிடுகின்ற வசதி கொண்டுள்ளது.

இது(GPLv2)எனும் உரிமத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://doublesvsoop.sourceforge.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க