பொதுவாக மனிதர்களுக்கு தத்தமது தனித்துவத்தின்மீது வலுவான உணர்வு உள்ளது. இது அற்பமான செயல்களில் கூட பலவிதமான கண்ணோட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் கணினி உலகம்கூட சிறப்பாக அமையவில்லை. ஒரு எளிய உதாரணத்தின் மூலம் இந்தசெய்தியை தெளிவுபடுத்தமுடியும். C, C++ அல்லது Java ஆகிய கணினிமொழிகளில் நிரலை எழுதும் போது, அடைப்புக்குறியை எங்கு பயன்படுத்திடுவோம்? பல தொழில்முறை நிரலாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளில் உள்ள இரண்டு பாணிகளில் ஒன்றைப் பின்பற்றுகின்றார்கள்:

fun(
) {

//Body of
the
function

}

foo(
)

{

//Body of
the
function

}

, ஒரு நிரலை மீண்டும்எழுதும் போது,அதாவது ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை சேமித்து வைப்பதற்கான பயன்பாட்டின் நிரலை எழுதிடும்போது அந்தநிரலில், பின்வருவனவற்றில் எதை ஒரு மாறியின் பெயராக தேர்வு செய்வோம் - மாணவர்கள் எண்ணிக்கை (Camel case), மாணவர்களின் எண்ணிக்கை (Pascal case) அல்லது மாணவர்களின்_ எண்ணிக்கை (Snake case)? மூல குறிமுறைவரிகளின் உள்தள்ளலைப் பொருத்தவரை இது மற்றொரு அற்பமான ஆனால் பரபரப்பாக விவாதிக்கப் படுகின்ற செய்தியாகும்
நிரல்களை எழுதும் போது இவை
போன்ற பிற தொழில்நுட்ப
/அழகியல் வாய்ப்புகள் மூலக் குறிமுறைவரிகளுக்கான வெவ்வேறு உள்தள்ளல் பாணிகளை உருவாக்க வழிவகுக்கின்றன. நிரலாளர்கள் பின்பற்றுகினற பிரபலமான உள்தள்ளல் பாணிகளில் சில K&R பாணி, குனு பாணி, ஆல்மேன் பாணி, ஒயிட்ஸ்மித்ஸ் பாணி போன்றவை அடங்கும்.
இப்போது நாம் இன்னும் தீவிரமான
செய்திகளுக்கு செல்வோம்
. திறமூல உலகில் இப்படி ஏதாவது உட்பூசல் நடக்கிறதா? துரதிர்ஷ்டவசமாக, 'ஆம்' என்பதே பதிலாகும். ஆனால் இது திறமூல மென்பொருள் தத்தெடுப்பை எதிர்மறையாக பாதிக்கிறதா? மீண்டும், பதில் 'ஆம்'. என்பதேயாகும் திறன்பேசிகள், பணிநிலையங்கள், முதன்மைபொறியமைவுகள், முதன்மை கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற இயக்கமுறைமைகளில் லினக்ஸ் அல்லது ஆண்ட்ராய்டு போன்ற அதன் மாறுபாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இருப்பினும், தனிப்பட்ட நபர்களின் கணினிகளில், லினக்ஸ் 10 சதவீதத்திற்கும் குறைவான பங்கைக் கொண்டுள்ளது. திறன்பேசியின் இயக்க முறைமைகளில் ஆண்ட்ராய்டு மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால், தனிப்பட்ட கணினியானPCஇன் இயக்க முறைமைகளில் லினக்ஸ் ஏன் ஆதிக்கம் செலுத்த முடியாது? லினக்ஸ் திறமையானது , பயன்படுத்த எளிதானது ஆனால் அது தனிப்பட்ட நபர்களின் கணினிகளான PCகளில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மக்கள் பொதுவாக விண்டோ இயக்க முறைமையுடன் கூடிய மடிக்கணினிகளைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் பயன்பாடு மிகவும் நேரடியாக செயல்படக்கூடியது (இந்த இயக்க முறைமை சிறந்த தேர்வா இல்லையா என்பது வேறு கேள்வி). லினக்ஸ் இயக்க முறைமையை நிறுவுகைசெய்வதற்கு லினக்ஸின் flavour (Fedora அல்லது Ubuntu அல்லது கிடைக்கக்கூடிய வேறு பல flavours)போன்ற பல வாய்ப்புகளில் ஒன்றினை பயனாளர் செய்ய வேண்டியுள்ளது அதன்பின்னர் . நமக்கு GNOME அல்லது KDE அமைப்பு வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக தெரிவுசெய்யவேண்டியுள்ளதால் தொழில்நுட்பம் இல்லாத நபருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
அதெல்லாம் இருக்கட்டும் தலைப்பு ஒன்றினை கொடுத்துவிட்டு வேறுஏதேதோ கூறிவருகின்றாயே என கோபித்துகொள்ளவேண்டாம். அறிமுகங்கள் ஒருபுறம் இருக்க, 'திறமூல போட்டிகள்' என்பதன் அர்த்தம்தான் என்ன? , ஆதிக்கத்திற்கான வெவ்வேறு திறமூல மென்பொருட்களுக்கு இடையிலான போட்டியைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகின்றது. வெளிப்படையாகச் சொல்வதானால், நடுநிலையான பார்வையாளர்களுக்கு, இந்த விவாதங்களும் போட்டிகளும் பெரும்பாலும் தேவையற்றதாகத் தெரிகிறது. முக்கியமான கேள்வி என்னவென்றால்: சில குறிப்பிட்ட மென்பொருட்களை ஏற்றுக்கொள்வது குறித்த விவாதங்கள் சித்தரிக்கும் அளவுக்கு தீவிரமானதா? நிற்க., 'UNIX போட்டி' என்ற சொல் 1980 களில் யுனிக்ஸின் வெவ்வேறு தரநிலை களுக்கு இடையிலான போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதைபற்றி உருவாக்கப் பட்டது. சில தொடர்புடைய இன்னும் போட்டியிடும் மென்பொருள்களின் ரசிகர்களிடையே பரஸ்பர விரோதம் எதிர்பார்த்ததை விட மிகவும் தீவிரமானதும் ஆழமானதும் ஆகும்என்பதை இது காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக, , இந்த போட்டிகள் எப்போதும் இணையத்தில் நடந்துகொண்டேயிருக்கின்றன. ங்கு, குறிப்பிட்ட மென்பொருளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக திறமூல உலகில் நடந்த சில முக்கிய போட்டிகளைப் பற்றி மட்டும் விவாதிப்போம். ஆனால் பொதுவான நகைச்சுவைகளைத் தவிர, ஒரு மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களிடையே உள்ள முட்டாள்தனமான தகராறுகள் கூட எவ்வாறு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் , மென்பொருள் மேம்பாடு , தொழில்நுட்பத் தத்தெடுப்பின் வேகத்தைத் தடம் புரளச் செய்யலாம் என்பதையும் இந்த விவாதத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

யுனிக்ஸ் போட்டிகள்
திறமூல உலகில் நடந்த அனைத்துப்
போட்டிகளிலும் இதுவே பழமையானது
. ஆரம்பகாலத்தில் AT&T UNIX, BSD UNIX ஆகியவற்றுக்கு இடையே இருந்தது. யுனிக்ஸ் 1960களின் பிற்பகுதியில் AT&T (அல்லது Ken Thompson and Dennis Ritchie )ஆல் உருவாக்கப்பட்டது என்றாலும், இதற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகமும், பெர்க்லியும் நிறைய பங்களித்த, மேலும் இது BSD (பெர்க்லி மென்பொருள் விநியோகம்) UNIX ஐ உருவாக்க வழிவகுத்தது. தொழில்நுட்ப , வணிக காரணங்களால், AT&T UNIX, BSD UNIX ஆகியவை1980 களின் முற்பகுதியில் பிரிந்தன. UNIX இன் உண்மையான தரநிலையாக மாறுவதற்கு இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே கடுமையான போட்டியின் தொடக்கத்தைக் குறித்தது. யுனிக்ஸ் போட்டிகள் என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியானது, 1990கள் வரை தொடர்ந்தது. ஆனால் இன்று இந்தப் போட்டியானது ஒரு தெளிவான லினக்ஸ் எனும் வெற்றியாளருடன் முடிந்துவிட்டது (தாமதமாக நுழைந்தாலும்) . லினக்ஸ் என்பது UNIX போன்ற இயங்குதளம் , இன்று இந்த லினக்ஸ் இயக்கமுறைமை யானது மிகவும் மேலாதிக்கமான திறமூல இயக்க முறைமையாகும்.
உரிமச் சிக்கல்க
ள்
, UNIX போட்டிகள் ஆகியவை லினக்ஸ் உருவாக்குவதற்கு ஒரு அடிப்படை காரணமாகும் . ஆனால், நாம் அடுத்த நிலையை அறிந்து கொள்ள செல்வதற்கு முன், அதாவது அதெல்லாம் சரி BSD UNIX ,AT&T UNIXஆகியவற்றிற்கு என்ன ஆனது?என தெரிந்துகொள்வதுதான் சரியாகும், உண்மையில் அவை அழிந்து மறையவில்லை. BSD UNIX இன் உணர்வைப் பெற விரும்பினால், BSD UNIX இன் திறமூல செயலாக்கமான FreeBSD முயற்சித்திடுக. FreeBSD ஐ யுனிக்ஸின் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததாக கருதலாம், ஏனெனில் இது BSD UNIX இன் மூலத்திலிருந்து வந்தவைகளில் மிகவும் பிரபலமானதாகும். AT&T UNIX இன் உணர்வைப் பெற விரும்பினால், Oracle Solaris, HP-UX அல்லது IBM AIX ஐப் பயன்படுத்தலாம். ஆனால் நினைவில் கொள்க, தற்போது இவை அனைத்தும் தனியுரிமை இயக்க முறைமைகளாகும். இவ்வாறான முதல் திறமூல போட்டிகள் பல்வேறு தனியுரிமை இயக்க முறைமைகளுடன் முடிந்தது ஆயினும் லினக்ஸ் ஆனது திறமூலவெற்றியாளராக தன்னுடைய முதன்மையான இடத்தினை தக்கவைத்துகொண்டது.

வெளியீடுகளின் போட்டிகள்
லினக்ஸ் தெளிவான வெற்றியாளராக வெளிவந்தது
என அறிந்தகொண்டோம் இதற்கடுத்ததாக இப்போது அவைகளின் வெளியீடுகளுக்கு இடையிலான போட்டிகளைப் பற்றி விவாதிப்போம்
. முன்பு லினக்ஸ் வெளியீடுகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பதாக பலர் நம்பினார்கள், ஆனால் தற்போது உண்மையில் அது ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகின்றது. பல லினக்ஸ் ெளிீடுகள் தங்களுடைய ஆதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை டெபியன் அடிப்படையிலானவை அல்லது Red Hat அடிப்படையிலானவை ஆகிய இரண்டு வகைகளுக்குள் மட்டுமே அமைந்துள்ளன. அதனால் நமக்கத்தேவையானதை நாம் ெரிவுசெய்திடுகின்ற பிரச்சினையை குறைக்கின்றது. Arch Linux, Gentoo Linux, openSUSE,Slackware ஆகியவை லினக்ஸின் பிற முக்கிய சுதந்திரமான ெளிீடுகளாகும். UNIX போட்டிகளைப் போலல்லாமல், இது தெளிவான வெற்றியாளர் இல்லாமல் நடந்துகொண்டிருக்கும் போட்டியாகும். மிகவும் பிரபலமான லினக்ஸ் ெளிீட்டிற்கான இந்த போட்டி நீண்ட காலத்திற்கு தொடரும் என கணிப்பது பாதுகாப்பானது. ஆனால் இப்போட்டியில் யார் முன்னணியில் இருக்கிறார்கள்? என்பதுதான் நம்முடைய முதன்மையான கேள்விக்குறியாகும்
DistroWatchஎனும் இணையதளமானது லினக்ஸ் ெளிீடுகளின் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைபடுத்திடுகின்றதொரு இணையதளமாகும். இந்தDistroWatch இல் உள்ள ஒரு குறிப்பிட்ட லினக்ஸ்வெளியீட்டின் பக்கம் எத்தனை முறை அணுகப்படுகிறது என்பதன் அடிப்படையில் இது லினக்ஸ் வெளியீடுகளை வரிசைப்படுத்துகிறது. இதனடிப்படையில் இந்த இணையதளமானது ஏறத்தாழ( அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு கருத்துக்கணிப்பு திரட்டி போன்று இது செயல்படுகிறது. மேலும், இந்த இணையதளததின் தரவரிசையானது லினக்ஸ் வெளியீடுகளின் பிரபலத்தை அளவிடுவதற்கான ஒரு இலகுவான வழி' என்று கூறுகிறது. எனவே, கண்டிப்பாகஇந்த தரவரிசையுடன் லினக்ஸ் ெளிீடுகளின் உண்மையான சந்தைப் பங்கை மதிப்பிட முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. Linux Mint, Ubuntu, MX Linux, Arch Linux, Gentoo Linux, Slackware, Debian, Fedora, openSUSE, CentOS ஆகியவை இந்த DistroWatch எனும் இணையதளதகவலின் படி, முதன்மையான முதல்10 முக்கிய லினக்ஸ் வெளியீடுகளாகும். முன்பே குறிப்பிட்டது போல, Arch Linux, Gentoo Linux, openSUSE , Slackware ஆகியவை Debian , Red Hat ஆகியஇரண்டு வெளியீடுகளிலிருந்தும் சுதந்திரமானவைகளாகும். மீதமுள்ள வெளியீடுகளில், Fedora, CentOS ஆகியவை Red Hat அடிப்படையிலானவை. Linux Mint, MX Linux, Ubuntu ஆகியவை டெபியன் அடிப்படையிலானவை. இதனால், டெபியன் பிரிவு தற்போது மேலாதிக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

GNOME , KDE Plasma ஆகியவற்றிற்கிடையேயான போட்டி

ஒரு இயக்க முறைமையின் வரைகலை பயனாளர் இடைமுகத்தின் பாணியை தீர்மானிக்கின்ற மேசைக்கணினி சூழல்களில் இப்போது கவனம் செலுத்துவோம். GNOME, KDE Plasma, Xfce, Cinnamon, Unity, MATE போன்றவை லினக்ஸின் பிரபலமான மேசைக்கணினி சூழல்களின் வரைகலை பயனாளர் இடைமுக பாணிகளாகும். GNOME, KDE Plasma ஆகியவை இத்துறையில் ஆதிக்கத்திற்காக போராடும் இரண்டு முக்கிய போட்டி யாளர்களாகும். இந்த போட்டியானது தற்போது மீண்டும் ஒரு கடுமையான போட்டியாகிவிட்டது. GNOME என்பது Ubuntu, Fedora, CentOS, Debian போன்ற லினக்ஸ் வெளியீடுகளுக்கான இயல்புநிலை மேசைக்கணினி சூழலின்வரைகலை பயனாளர் இடைமுக பாணியாகும். Fedora, Kubuntu (கேடிஇ உடன் உபுண்டு), Manjaro, openSUSE, Gentoo Linux போன்ற லினக்ஸ் வெளியீடுகள் KDE Plasma இற்கான ஆதரவைக் கொண்டுள்ளன. GNOME அல்லது KDE மிகவும் பிரபலமாக உள்ளதா என்பதைக் கண்டறிய எந்தவொரு நம்பகமான வழிமுறையும் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. GNOME என்பது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான லினக்ஸ் வெளியீடுகளின் இயல்புநிலை மேசைக்கணினி சூழலின் வரைகலை பயனாளர் இடைமுக பாணியாக இருப்பதால், இந்த மேசைக்கணினி சூழல்களின் வரைகலை பயனாளர் இடைமுக பாணிகளின் போட்டியில் KDE பிளாஸ்மாவை விட இது ஒரு சிறிது கூடுதலாக கொண்டிருப்பதாகக் கருதலாம். மேலும், Cinnamon, MATE போன்ற பிற பிரபலமான மேசைக்கணினி சூழல்களின்வரைகலை பயனாளர் இடைமுக பாணிகளானவை GNOME இலிருந்தான துனுக்குகள் ஆகும்

பதிப்பாளர்களுக்கிடையேயான போட்டிகள்
முந்தைய பல போட்டிகளைப் போன்றில்லாமல், இதுபெரும்பாலும் வணிகக் காரணங்களால் தூண்டப்பட்டு, முக்கியமாக தொழில்நுட்ப, தத்துவக் காரணங்களுக்காக நடத்தப்பட்ட போட்டியாகும். பதிப்பாளர் போட்டி என்பது மிகவும் பிரபலமான திறமூல உரைப்பதிப்பாளராக மாறுவதற்கான கடுமையான போட்டியாகும். Emacs, Vi, Atom, gedit, KWrite, GNU nano போன்றவை சில பிரபலமான திறமூல உரைபதிப்பாளர்களாகும். ஆனால் 1980களின் நடுப்பகுதியில் தொடங்கிய உரைபதிப்பாளர் போட்டியில் முக்கியமாக Emacs, Vi ஆகிய இரு ஆதரவாளர்களுக்கு இடையேதான் நடந்தது. இப்போதெல்லாம் Vi பதிப்பாளருக்கு பதிலாக அதே போன்ற இன்னும் சக்திவாய்ந்த Vim பதிப்பாளராக மாறியிருப் பதைக் காணலாம். Emacs , Vim ஆகியவை பற்றிய பரஸ்பர விமர்சனங்கள் நிறைய நகைச்சுவைகளை உருவாக்க வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, Emacs க்கான நீட்டிக்கக்கூடிய Vi அடுக்கானது (இது Emacs இல் சில Vi திகளை வழங்குகிறது) 'தீய இயக்கமுறைமை ' என்று அழைக்கப்படுகிறது, அதேசமயம் Vim ஆதரவாளர்கள் Emacs இன் சிக்கலான தன்மையை " ஒரு ஒழுங்கான பதிப்பாளர் இல்லாததால் இதுஒரு சிறந்த இயக்க முறைமை" என்று அழைப்பார்கள். ." Emacs என்பது சுவிஸ் இராணுவ கத்தி போன்றது - இதில் பல செயலிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் பயன்படுத்துவதே யில்லை. Vim என்பது ஒரு கூறியகத்தி போன்றது -இது ஒரே ஒரு கொடிய கத்தியாகும் Emacs org-modeஇல் பயன் படுத்திகொள்ளலாம். , Emacs மிகவும் சக்தி வாய்ந்தது புதியவர்களுக்கு அதிகபயனுள்ளதாக இருக்கிறது என உணரலாம். சுருக்கமாக, Emacs சிக்கலானது ஆனால் சக்தி வாய்ந்தது, அதேசமயம் Vim எளிமையானது விரைவாக செயல்படக்கூடியது.
இப்போது, இந்த பதிப்பாளர்களின் போட்டியில் சாதகமாக இருக்கின்ற பிரிவை அடையாளம் காண முயற்சிப்போம். Stack Overflowஇன் வருடாந்திர மேம்படுத்துநர் கணக்கெடுப்பின் முடிவுகள் ஒரு கருவியின் பிரபலத்தின் நல்ல குறிகாட்டியாகும். 2016 முதல் 2019 வரையிலான வருடாந்திர ஆய்வுகளில் பிரபலமான வளர்ச்சி சூழல்கள் பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகளில் பதிலளித்தவர்களில் சுமார் 25 சதவீதமானவர்கள் Vim ஐ விரும்பினர், அதேசமயம் பதிலளித்தவர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் Emacs ஐ விரும்பினர்கள். இது ஒரு தெளிவான முன்னணி போல் தெரிகிறது. இதனால், தற்போது, விம்மின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.

Apache OpenOffice , LibreOffice ஆகியவற்றிற்கிடையேயான போட்டி
நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்வதற்கான லினக்ஸ் வெளியீடு, மேசைக் கணினி சூழலில் ,முன்கூட்டியே எந்தஉரைபதி்ப்பாளர் என முடிவு செய்திருந்தால், தேவையான அடுத்த அத்தியாவசிய மென்பொருளான அலுவலக பயன்பாடுகளின் தொகுப்பிற்கு செல்வோம். அலுவலகபயன்பாடுகளின் தொகுப்புகளில் பொதுவாக ஒரு சொல் செயலி, விரிதாள் , விளக்கக்காட்சி போன்றவை அடங்கும். 2001 முதல் 2011 வரை, OpenOffice.org மிகவும் பிரபலமான திறமூல அலுவலக பயன்பாடுகளின் தொகுப்பாக இருந்தது, மேலும் சன் மைக்ரோசிஸ்ம் எனும் நிறுவனத்தாரால் இந்த அலுவலக பயன்பாடுகளின் தொகுப்புகள் ஆதரிக்கப்பட்டது. பின்னர் 2010 இல் ஆரக்கிள் கார்ப்பரேஷனால் இதுகையகப்படுத்தப்பட்டபோது, இதனுடைய பங்கேற்பாளர்கள் பலர் இதற்கு எதிராக ஒரு fork அவசியம் என்று உணர்ந்தனர் .அதனால் OpenOffice.org இல கொந்தளிப்பான ஒரு சூழல் உருவானது தொடர்ந்து பிளவு உருவாகி LibreOffice எனும் புதிய அலுவலக பயன்பாடுகளின் தொகுப்பு தோன்றியது OpenOffice.org இன் பங்கேற்பாளர்கள் LibreOffice இன்செயல் திட்டத்திற்கு பங்களித்திட ஒட்டுமொத்தமாக மாறிவிட்டனர், எனவே LibreOffice , Apache OpenOffice என அலுவலக பயன்பாடுகளின் தொகுப்புகளின் மத்தியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கான போட்டிக்கு இது ஒரு காரணமாக அமைந்தது. இல்லையெனில், தேர்வு தெளிவாக இருந்திருக்கும். இதுவும் இன்றுவரை தெளிவான வெற்றியில்லாத ஆதிக்கத்துக்கான ஒரு போட்டியாக அமைந்துள்ளது. Apache OpenOffice உடன் ஒப்பிடும் போது LibreOffice ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் மேம்படத்தப்பட்ட வெளியீடுகளைக் கொண்டுள்ளது என்பதே இதற்கு ஆதரவான ஒரு கூடுதல் வாக்குஆகும் . Apache OpenOffice ஐ விட LibreOffice சற்று மேலெழுந்ததற்கு மற்றொரு காரணம் அதன் தோற்றமும் புத்துணர்வும் ஆகும். LibreOffice என்பது மிகவும் பிரபலமான தனியுரிமை அலுவலக தொகுப்பான மைக்ரோசாஃப்ட் ஆபிஸைப் போலவே தோன்றுகிறது. மைக்ரோசாஃப்ட்டின் அலுவலக பயன்பாட்டிலிருந்து இடம்பெயர்ந்த ஒருவருக்கு இது உதவியாக இருக்கும்.

இணைய உலாவிகளுக்கிடையேயான போட்டிகள்
உலகளாவிய
இணையம்ஆது
1990 களின் நடுப்பகுதியில் மிகவும் பிரபலமானது. முதல் இணையஉலாவிகளுக்கு இடையேயான போட்டி Netscape Navigator , Internet Explorerஆகிய இரண்டிற்கும் இடையிலான ஆதிக்கத்திற்கான போட்டியாக இருந்தது. ஆயினும் Netscape Navigator , Internet Explorer ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஆதிக்கத்திற்கான போட்டி தோல்வியில் முடிந்தது. Netscape Navigator ஆனது 2008 இல் அதன் இறுதி வெளியீட்டுடன் போட்டியை முடித்து கொண்டது, Internet Explorerஆனது தன்னுடைய வெளியீட்டினை2022 முதல் நிறுத்தப்படும் என அறிவித்து முடிக்கவிருக்கின்றது. ஆனால் இணைய உலாவிகளுக்கு இடையிலான போட்டிகள் இன்னும் முடிவடைய வில்லை என்பதே உண்மைநிலவரமாகும். இணையஉலாவிகளுக்கு இடையிலான இரண்டாவதுபோட்டி தற்போது சூடுபிடித்துள்ளது, முக்கியமாக Chrome, Safari, Edge, Firefoxஆகியவற்றிற்கு இடையே போட்டி மிகக்கடுமையாக நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த இரண்டாவது இணைய உலாவிகளுக்கு இடையிலான போட்டியில், தற்போதையநிலையில் வலுவான போட்டியாளர்களில் முதன்மையானது Chrome ஆகும். Stat Counter எனும் பிரபலமான வலைப் போக்குவரத்து பகுப்பாய்வு இணையதளத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இணைய உலாவிகளில் Chrome ஆனது 60 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. சஃபாரி, எட்ஜ் ஆகியவை Chrome ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளன, மேலும் அவை முறையே இரண்டாவது , மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்த இணைய உலாவிகள் எதுவும் முழுமையான திறமூலமாக இல்லை என்பதைக் கவனித்தில் கொள்க. உண்மையான திறமூல இணைய உலாவியான Firefox ஆனது நான்காவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவாதத்திலிருந்து, அடிக்கடி ஏற்படும் forks, போட்டிகள் பெரும்பாலும் திறமூல மென்பொருளை ஏற்றுக்கொள்வதை எதிர்மறையாக பாதிக்கிறது
மேலும் லினக்ஸுக்கு மாறத் திட்டமிடும் தொழில்நுட்பம் அல்லாத நபரின் குழப்பத்தை மேலும் அதிகரிக்கிறது
.

இந்த விவாதத்தினை முடிப்பதற்கு முன், நம்மில் பெரும்பாலோனோர் Fedora, KDE Plasma, Vim, LibreOffice, Chrome போன்றவற்றைப் பயன்படுத்துகின்றோம் Ubuntu/GNOME/Vim/LibreOffice/Firefox ஆகியவற்றை தெரிவுசெய்திடுகின்ற நபராக இருந்தால், நாம்பணிபுரியும் மென்பொருளைப் பற்றி அலட்சியமாக இருந்தால், கணினி உலகில் நாம் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்ற செய்தியை மனதில் கொள்க.

நான் வலியுறுத்த விரும்பும் செய்தி என்னவென்றால், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மென்பொருளுக்கான ஆதரவு பெரும்பாலும் மிகவும் நல்லதுதான் , அதிலிருந்து நாம் மாறுவது அரிது. எனவே நாம் பயன்படுத்த விரும்பும் திறமூல மென்பொருளைப் பற்றி நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றால், அதைச் செய்வதற்கு இது ஒரு நல்லதொரு நேரமாகும் என்ற செய்தியைை கவணத்தில் கொண்டு உடன் சரியானவைகளை தெரிவுசெய்க